உனது துன்பங்களை என்னிடம் கொடுத்து விடு...

உனது துன்பங்களை என்னிடம் கொடுத்து விடு...


தடைபடாத, பிரதிபலன் எதிர்பார்க்காத ஞானம், மற்றும் கர்மாக்களின் ஆதிக்கமற்ற அன்புடன் கூடிய, இறைவனைப் பற்றிய சிந்தனைதான் உயர்ந்த பக்தி.

ஆன்மீக
சாதனைகளின் முக்கியமான நோக்கமே, மனதைத் தூய்மைப்படுத்துவதுதான்.

பக்தி நூல்களின்படி, இதில் வெற்றி பெற, ஒருவனின் இதயத்தினுள் உறையும் இறைவனிடம் இடைவிடாத தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

எந்த
வகையிலாவது மனதை, இறைவன்பால் திருப்ப வேண்டும்.

உன்
நினைவில் எப்போதும் இறைவன் இருக்க வேண்டும்.

தன்
ஆன்மீக முயற்சிகளில் முழுமை கண்டவர் 'சித்தர்' என அழைக்கப்படுகிறார்.

மனிதர்களின்
அபிலாஷைகளில் எல்லாம் முழுமையானது அந்த இலக்கை அடைவதுதான். அது அடையப்படும் வரை சாதனா தொடரப்பட வேண்டும்.

இந்த
முழுமை மனிதனுக்குள்ளேயே உறைகின்றது.

ஆனால்
அஞ்ஞானம் தான் காணவொட்டாமல் மறைக்கின்றது.

உங்கள்
பொறுப்புகளைத் தள்ளி விடாதீர்கள். அவற்றை எதிர்கொள்ளுங்கள்.

அதற்காக
ஓவ்வொரு நாளும் புதிது புதிதாக பொறுப்புகளை, உங்கள் அகங்காரத்தை மகிழ்விப்பதற்காக ஏற்றுக்கொள்ளாதீர்கள். கொச்சையாகச் சொல்லப் போனால் தொந்தரவுகளை விலைக்கு வாங்காதீர்கள்.

உலக
நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

உட்புறமாக
மனதைச் செலுத்திப் பிரார்த்தனை செய்யுங்கள்.

முழுமையான மன அமைதி, என்பது மனம் இறந்தபின்தான் கிடைக்கும். மனம் என்றால் எண்ணங்கள்.

எண்ணங்கள் என்றால் பதட்டங்கள்.

எந்த
அளவுக்கு மனம், எண்ணங்களைக் குறைக்கிறதோ அந்த அளவுக்கு அமைதி நிச்சயம்.

நீங்கள் உடலல்ல. உடல் என்பது ஒன்பது துவாரங்களடங்கிய அழியும் பொருளாகும்.

ஆகவே
இந்திரிய சுகத்தை புலனின்ப நுகர்ச்சியை நாடிச் செல்லாதீர்கள்.

கடவைள நோக்கி மனதை திருப்புங்கள். அப்போது மனம் இயற்கையாகவே உலக இன்பத்தை நாடுவதை விட்டு விடும்.

பிறகு
உங்கள் மனதின் மேல் நீங்கள் ஆதிக்கம் செலுத்துவது எளிதாகும்.

இறைவனை நோக்கி மனதைத் திருப்பினால், நீ கடவுட் தன்மை அடைகிறாய்.

உலக
இன்பங்களை நோக்கி உன் மனதைத் திருப்பினால், நீ கடவுட் தன்மையை இழக்கிறாய்.

ஓவ்வொருவரிடமும்
கடவுளைக் காணுங்கள். (பகவத் பாவம்) பலவகையினூடே உள்ள அடிப்படை ஒற்றுமையை காணுங்கள்.

நீ உடலில் வியாபித்திருக்கும் ஆத்மாவாகும். ஆத்மா அழிவதில்லை. உடல் அழிகிறது.

உன்னுடைய
துன்பங்களையெல்லாம் என்னிடம் கொடுத்துவிட்டு என்னிடமிருந்து அளவற்ற ஆனந்தத்தைப் பெறுவாயாக.

Tuesday, December 26, 2006

சேவை செய்வதன் மூலம், தற்பெருமை குறையும்.-சாயி பாபா


புலன்களின் பேராசைக்கு இணங்குவதன் மூலம்
ஒருவனுடைய ஆன்மீகபலமும், ஞானமும் படிப்படியாக மறைகின்றன.

தீர்மானமான திட்டங்கள் மூலம் புலன்ஆசைகளை விட்டுவிட முயல வேண்டும்.


பொறாமையை விடுவதன்மூலம், கோபத்தை ஒருவன் வெற்றி கொள்ள முடியும்.

செல்வத்தை அதிகமாக சேர்ப்பதனால் ஏற்படும் துன்பங்களைப் பற்றி விவாதிப்பதன் மூலம் ஒருவன் பேராசையை விட்டுவிட முடியும்.

வாழ்க்கையின் உண்மைகளை பற்றி ஆராய்ந்து தெளிவதன் மூலம் பயம் நீங்கும்.

ஆன்மீக உண்மைகளை கற்று அறிவதன் மூலம் வீண் புலம்பல்களையும் மாயையும் ஒருவன் வெல்ல முடியும்.

தேவையுள்ள மனிதனுக்கு சேவை செய்வதன் மூலம், தற்பெருமை குறையும்.

மௌனத்தின் மூலம் ஆன்மீகப் பாதையின் தடங்கல்களை நீக்கி வெற்றி பெறலாம்.


புலன்ஆசைகளை விடுவதன் மூலம், பொறாமையை அடக்கி வெற்றி பெறலாம்.

கடவுள் ஒரு அன்பான எஜமானன்.


அவருடைய

ஊழியனை மதித்து, மகிழ்விப்பதால் அவருக்கு நிகர் அவரே!

அவனைத் தன்னுடன் சரியாசனத்தில் அவன் எவ்வளவு எதிர்திது முரண்டு பிடித்தாலும்,

அமர்த்தி ஆனந்தப்படுபவர்.

ஆன்மீகப் பயிற்சிகளுக்கு இடைவேளை என்பதே கூடாது.

அப்படி விட்டுவிட்டுச் செய்யும் பயிற்சிகள்,
முந்தைய நல்ல பலன்களையும் அடித்துச் சென்று விடும்.

அது மட்டுமின்றி உள்ளத்திலிருந்து துரத்தப்பட்ட எதிரிக்கு(தீயஎண்ணங்கள்) மீண்டும் நல்வரவு கூறுவதாக அமைந்துவிடும்.

சுயநலம், தியாகம் நிறைந்த தொடர்ந்த செயல்களால், மனம் தூய்மை அடைந்தாலன்றி இறைவனின் அருள் கிடைப்பதில்லை.

தொடர்ந்து வீசும் இனிய தென்றலைப் போல் வரும் கடவுளின் அருளை அடைய

ஆன்மீக சாதனைகள் அவசியம்.

எப்படி படகோட்டி, காற்று வீசத் துவங்கியதும்,

தன் பாய்மரத்தை விரித்து, காற்றின் சக்தியைப் பெறுகிறானோ அதைப்போல,
சாதகனும் தன் ஆன்மீக சாதனைகள் மூலம் இறையருளைப் பெற வேண்டும்.

இனிமையற்ற உண்மையும், இனிமையான பொய்யும் இரண்டுமே விலக்கப்படவேண்டியவை.

நான் எல்லாவற்றையும் முழுமையாக பார்க்கிறேன்.

நீங்கள்...பகுதிகளாகத்தான் காண்கிறீர்கள்.

முக்காலத்தையும் நான் உணர்கிறேன்.


நீங்கள்...கடந்த, வருங்காலங்களை நினைவில் கொள்ளாமல்...
நிகழ்காலத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.


அதனால்தான் உங்கள் பார்வையில் வேற்றுமையும்,
என் பார்வையில் ஒருமைப்பாடும் தெரிகிறது.

உங்களுக்கு இசைவாகத் தெரியாததெல்லாம்
எனக்கு முழுமையான அர்த்தமுள்ளதாக தோன்றுகிறது.


26-12-2006

sathya sai baba's quotes in tamil, sathya sai baba quotes in tamil, saththiya sai baba sayings in tamil,saththiya saayee baba,sai baba quotes,sayee baba quotes,satya sai baba in tamil

Friday, November 17, 2006

நீ யார் அதை நிர்ணயம் செய்வதற்கு?- சத்ய சாயி பாபா
ஓம் ஸ்ரீசாய்ராம் .


இந்த உடல் நமக்கு அளிக்கப்பட்டது,
தெய்வீக அருளைப் பெறுவதற்காகவே.

அதனால் இந்த உடல் நன்கு பராமரிக்கப்படவேண்டு;ம்.

சுத்தமாகவும், தூய்மையாகவும்,
அழுக்கு, வியாதி, வருத்தம், தோல்வி மனப்பான்மை இவற்றால் பாதிக்கப்படாமலும்
உடல் பாதுகாக்கப்பட வேண்டும்.

எப்போதெல்லாம் உன் நம்பிக்கை என் அன்பைச் சந்திக்கிறதோ, அப்போதெல்லாம்
அங்கு துயரம் விலகுகிறது.

உலகியலாக ஆயிரம் விஷயங்களை
என்னிடம் யாசிக்கிறாய்.
ஆனால் என்னையே உனக்குத் தர நான் தயாராக இருந்தும்
நீ கேட்க மறுக்கிறாய்.

உடலையும், ஆன்மாவையும் ஒருங்கிணைத்து செயல்பட வைப்பதற்கான உலகியல் பொருட்களையும்
பற்றுதல் இன்றிப் பயன்படுத்துங்கள்.

உறங்கச் செல்லும்போது கூட,
இறைவனை மனதில் நிறுத்திப் பின்னரே உறங்குங்கள்.

ஏனெனில், அந்த நித்திரையும் வீணாகக் கூடாதல்லவா?


பக்தியின் உண்மையான இயல்பு
பரிபூரண சரணாகதி.

அது இல்லையென்றால்
பக்தி உயிரற்றதாகி விடுகிறது.

உன்னுடைய சுயநலத்தையும், அகங்காரத்தையும்,
இறைவனிடம் நீ சமர்ப்பிக்கவில்லை என்றால்,
அவர் உன் பிடியில் அகப்படமாட்டார்.

மனம் எப்போதும் இறைவனைப் பற்றியே சிந்திக்கட்டும்.
எல்லோரையும் கடவுளாகவே காணட்டும்.

இதுதான் ஒருமுனைப்பட்ட மனம் என்பது.

இப்படி மனத்தை பழக்கிவிட்டால்,

அது உலகில் உள்ள குற்றம் குறைகளைத் தேடி அலையாது.


தீயனவற்றின் பின் செல்லத் தயங்கும்.
நிலையற்ற எந்த வகையிலும், பயனற்ற
எண்ணங்களுக்கு இடம்கொடுக்காது.

அதற்குப் பதிலாக
மனிதனின் ஆன்மீக முன்னேற்றத்துக்கு வழி வகுத்து,
அவனை இறைவனை நோக்கி அழைத்துச் செல்லும்.

பிறரிடம் உதவி பெறுவது என்பது
அவருக்குக் கட்டுப்பட்டவராக உங்களை ஆக்கி விடும்.

சுய கௌரவத்துடன் இருந்து மதிப்புடன் வாழுங்கள்.

இது தான் உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் சேவை.


கடவுளின் கைகளில் உங்களை ஒப்படைத்து விடுங்கள்.

வெற்றியாவது ....தோல்வியாவது தரட்டும்.

அதனால் என்ன?

உன்னை மேலும் உறுதியானவனாக ஆக்க அவர் முயலலாம்.

அல்லது அதுவே வரவிருக்கும் நாட்களில்
உனக்கு நன்மையாக முடியலாம்.

எப்படி உன்னால் அதை தீர்மானிக்கமுடியும்?

மேலும் நீ யார்அதை நிர்ணயம் செய்வதற்கு?

உன் திறமை முழுவதையும் செலவழித்து செயலாற்று.

பிறகு மௌனமாக இரு.

உன் மனதை இந்த முறையில் உறுதியாக நிலைநிறுத்து!

அது தான் உன் கடமை.

உங்கள் உள்ளத்து வேதனைகளை ஆற்றிக் கொள்ள சேவை செய்யுங்கள்.

சேவை செய்ய வேண்டியது,
நீங்கள் சார்ந்த குழுவின் கட்டளை என்பதாலோ அன்றி,

உயர்ந்த இடங்களில் நீங்கள் செய்யும் சேவை
மதிக்கப்படுகிறது என்பதாலோ அன்றி,

சேவை செய்வது என்பது
செல்வத்தால் சிறந்தவர்களின் கடமை என்பதாலோ செய்யாமல்,
சேவை செய்யாமல்....
எனக்கு மன அமைதி கிடைக்கவில்லை என்ற காரணத்தால்
சேவை செய்யுங்கள்.

சேவை மற்றவரிடம் அன்பான நெருக்கத்தைத் தூண்டும் உள்ளத்து உணர்வாக கிளர்ந்து எழட்டும்.


18 -11-2006

Sunday, September 17, 2006

நடக்க வேண்டியவை நடந்தே தீரும்.....- சத்திய சாயி பாபா

நாடும் உலகமும் நன்மை பெறட்டும் .

பாரததேசம் என்பது ஒரு தனியான நாட்டை மட்டும் குறிப்பிடுவது அல்ல.
உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு துõய்மையான ஜீவ பிரும்ம தத்துவத்தை போதிக்கக்கூடிய அமைதி நிறைந்த இடம்.
சரஸ்வதி, பகவதி, பாரதி என்றெல்லாம் கூறுகிறோம்.
சரஸ்வதி வாக்கிற்கு சக்தி கொடுக்கும் தேவதை.
ஆகவே, வாக்கின் சக்தியால் நல்ல பணியை செய்பவர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் பாரதத்தின் மக்களே.
இந்த பண்பு மனித குலத்திற்கே பொருந்தக் கூடியதாகும்.

ஆன்மிக, அரசியல் மற்றும் இலக்கிய துறைகளிலும் மேன்மை பெற்ற நாடு இது.
ஒவ்வொரு உள்ளமும் நல்ல எண்ணங்களைக் கொண்டால்,
நல்ல விளைவுகள் ஏற்படும்.
அப்போது உலகம் முழுவதுமே நன்மை ஏற்படும்.
இதுவே உண்மையான பாரதத்தின் உயரிய தொண்டு.

நான் உங்களை வேறொன்றும் கேட்கவில்லை.
பிரேமையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
மனிதன் ஒவ்வொரு உயிரையும் கடவுளின் குழந்தை என்று கருதவேண்டும்.
வெறுப்பை விட்டொழித்து யாருக்கும் தீங்கிழைக்காத நல்லுணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
எனக்கு கவலை என்பதே கிடையாது.
துயரமும் இல்லை.
எல்லாமே நிலையற்றவை என நான் கருதுகிறேன்.
எதுவும் நம்முடையவை அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
வரும்போது கொண்டுவரவில்லை.
போகும்போது விலாசமும் கொடுப்பதில்லை.
பிறகு இவற்றைப்பற்றிய கவலையை மட்டும் சுமப்பானேன்?

வாழும் குறுகிய காலத்தில் தெய்வ சிந்தனையுடன்,
தளராத நம்பிக்கையுடன்,
வேறுபாட்டு உணர்வை நீக்கி,
எல்லோரும் தெய்வத்தின் உருவங்களே என்று உணர்ந்து வாழுங்கள்.
உங்கள் வாழ்க்கை புனிதமாகும்.
நாடும் உலகமும் நன்மை பெறும்.

நீ வெளிச்சத்தில் இருக்கிறாய்.
ஒளி உன்னிடம் இருக்கிறது.
நீயே ஒளியாகிறாய்.
உன் சொல், செயல், சிந்தனை, குணம், மனம் ஆகியவற்றை கவனி.

நீ நம்பிக்கையை வளர்த்துக்கொள்.
அப்போதுதான் பிரச்னைகள் வெள்ளம்போல வந்து தாக்கும்போது, பாறைபோல எதிர்த்து நிற்க இயலும்.
வெளியுலக வாழ்வின் மாறும் சூழ்நிலைகளை அந்த நம்பிக்கை மறக்கவைக்கும்.
ராமதாசர் சிறையிலிடப்பட்டபோது, அந்த நன்மைக்காக ராமருக்கு நன்றி கூறினார்.
ஏனென்றால், சிறையின் பெருஞ்சுவர்கள் கனிவு கூர்ந்து,
வெளி உலகத்தை முழுமையாக விலக்கி வைத்து,
ராமநாம சிந்தனையில் இடையூறின்றி தொடர வைத்தமைக்காக நன்றி பாராட்டினார்.

ஞானக்கதவுகள் திறக்கட்டும்.
அறியாமைத்திரை கிழிபடட்டும்.
தெய்வீக பேரானந்தம் வீட்டுக்குள் செல்லட்டும்.
நிலையான நிம்மதியில் நீ இருப்பாய்.

முன்னதாக புறப்படு.
மெதுவாக ஓட்டு.
பாதுகாப்பாய் போய்ச்சேர்.
உன் வாழ்வை ரோஜாப்பூவாக்கிக்கொள்.
அது "நறுமணம்' என்ற மவுனமொழியில் பேசட்டும்.

தன்னலமற்ற தொண்டு என்னை மகிழச் செய்கிறது.
அனைத்து ஒழுக்கங்களுக்கும் அடிப்படை தூய்மையான மனம்தான்.

மிக விரும்பக்கூடிய செல்வம் இறையருளே.
கண்ணை இமை காப்பதுபோல் அவன் உங்களை காப்பாற்றுவான்.
இதில் சந்தேகம் வேண்டாம்.
நல்லதையே கேள்; நல்லதையே காண்; நன்றே செய்; நலமே எண்ணு; அப்போது தீயவை களையப்படும். இறையருள் உனக்கு இனிதே கிடைக்கும்.


ஆத்மாவிற்கு உரமிடுங்கள் .

பாரதப் பண்பாடு அனுபவத்தாலும், வெளியுலகம் அறிவதாலும் மேலும் மேலும் சிறப்படைந்து வருகிறது.
அனுபவம் மேலிட மேலிட நம் பண்பாடு பற்றி அதிகம் அறிகிறோம். புதிய எண்ணங்கள் நமக்கு எழுகின்றன.

உன் காலில் தைத்துள்ள முள்ளை இன்னொரு முள்ளால்தான் எடுக்க வேண்டும்.
பாதத்தில் தைத்த முள்ளை எடுக்க கோடாரியைப் பயன்படுத்த முடியாது.
வைரத்தை வைரத்தால்தான் அறுக்க முடியும்.
ஒரு மனிதனைப் புரிந்து கொள்ள மிக முக்கியமான மனித இயல்புகளால்தான் முடியும்.

பல மரங்களைப் பார்த்திருக்கலாம்.
சில பெரிய ஆலமரங்கள் பெரிய மாளிகை போலப் பெரியதாய் காட்சி அளிக்கின்றன.
அதன் விதையைப் பார்த்தால் கடுகு போல மிகச் சிறியதாயுள்ளது.
அந்த மிகச்சிறிய விதையுள் தான் அந்த மிகப்பெரிய ஆலமரம் உள்ளது என்பதுதான் உண்மை.
இதே போலப் பிரபஞ்சமெனும் பெரிய மரத்தில் காண்பன யாவும், தெய்வீகமெனும் சிறிய விதையிலிருந்து தோன்றியதுதான்.
இவ்வண்ணமே உன் பெரிய உடலில் ஆத்மாவின் அம்சமாக மிகமிகச் சின்னஞ்சிறிய விதையுள்ளது.
அதற்கு உரமிட்டு, வளர்த்து செழிக்கவிடு.
அப்போதுதான் பிரபஞ்சத்தின் தெய்வ ஸ்வரூபம் தெரியும்.

ஒரு மனிதன் வாழ்வில் நடக்க வேண்டியவை நடந்தே தீரும்.
தவிர்க்க முடியாத சம்பவங்களை எடுத்துக் கொண்டு பொறாமையை வளர்க்கப் பயன்படுத்துவது தவறு.
அது நல்ல மனித இயல்பு அல்ல.
அனுபவிக்க வேண்டிய நோய், சூழும் துன்பம், நமக்குள்ள தொந்தரவுகள் யாவும் வெளியிலிருந்து வந்தவையோ, கடவுள் கொடுத்தவையோ அல்ல.
அவை யாவும் நம் செயலின் விளைவுகளே.

பயமே நோய்க்கு காரணம்
* இன்று மனிதன் கவலையின் கைதியாக இருக்கிறான்.
மன நிறைவின்மையே கவலைக்கு காரணம். கவலை வேகத்தை விளைவிக்கிறது.
உணவை சமைக்கும் நெருப்பை கடவுள் என கீதை சொல்கிறது. உண்பதன் நோக்கம், கடவுள் நமக்கு அளித்த கடமைகளைச் செய்வது அல்லது அவனை மகிழ்விப்பதாகும்.
இதன் விளைவு கடவுளை நோக்கி முன்னேறுவது.

* மனிதன் இன்பமாக வாழவே பிறந்திருக்கிறான். ஆனால், அவன் துன்பத்தில் தவழுகிறான். இது வருத்தமான விஷயம்.
ஆனந்தத்தின் ஆதாரம் அவனிடமே இருக்கிறது.
உண்மையான கல்வி, மனிதனுக்கு இன்பத்தை எவ்வாறு பெற வேண்டும் என்பதுபற்றி கற்பிக்க வேண்டும்.
கல்வி உன்னை இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துச்செல்ல வேண்டும்.

* ஒருவன் உன்னை குற்றம் கூறியோ, அவதூறாக பேசியோ, துன்புறுத்தினாலும், அதனையே அவனுக்கு திருப்பாதே.
சகிப்புத்தன்மையுடன் நடந்துகொள். ஒருவனை நாய் கடித்தால் அவன் அதை திரும்ப கடிப்பதில்லை.
28 -09 -2006
---------------

நேர்மையான வாழ்க்கையின் முதல் அடிப்படைத் தேவை,
மௌனத்தைக் கடைப்பிடிப்பது தான்.
ஆன்மீக சாதகரின் பேச்சே மௌனம் தான்.
மௌனத்தின் ஆழத்தில் தான் கடவுளின் குரலை நீ கேட்க முடியும்.

இரண்டாவது அடிப்படைத் தேவை சுத்தம்.
வெளிப்புற சுத்தம் அல்ல.உட்புற சுத்தம்.
இந்த உட்புற சுத்ததிற்கென்று தனிப்பட்ட சோப்பும், தண்ணீரும் கிடையாது.
உட்புற சுத்ததிற்கு...விடாப்பிடியான நம்பிக்கை என்ற சோப்பும்,
இடை விடாத சாதனை என்கின்ற தண்ணீரும் இருக்கின்றன.
மூன்றாவது அடிப்படைத் தேவை...
தனது கடமையின் மேல் பக்தி கலந்த ஒரு ஈடுபாடு.

கடமையே கடவுள்.வேலையே வழிபாடு.
ஒரு குறிப்பிட்ட வேலை நேரத்தின் போது போடப்படுகின்ற யூனிபார்ம் போல வழிபாடு இருக்கக் கூடாது.[வேண்டும் போது போது போடுவதும் ...வேண்டாத போது கழட்டுவதும். ]

உங்கள் மனமானது இந்த மூன்று அடிப்படைத் தேவைகள் பற்றி விடாமல் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.
1.மௌனம்.
2.உட்புற சுத்தம்.
3.கடமையில் கண்ணாக இருத்தல்.

வெளி உலகத்தில் வாழ்க்கை தீராத துன்பம் நிரம்பியது.
ஆனால்...உள் உலகத்தில் வாழ்க்கை என்பது...எளிமையானது.சுலபமானது.
வாழ்க்கை என்பது ஒரு புனித யாத்திரை.
மனிதன் முள் நிறைந்த கரடு முரடான பாதையில் சிரமப்பட்டுக் கொண்டு போகிறான்.
பகவத் நாமம் அவன் நாவிலே இருந்தால் தாகம் எடுக்காது.
இதயத்திலே இறை உருவம் இருந்தால்...களைப்புத் தெரியாது.
சாதுக்களின் சேர்க்கை அவனை உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் பயணம் செய்ய வைக்கும்.
பகவான் கூப்பிடு தூரத்தில் தான் இருக்கின்றான் என்ற நிச்சயம் உனக்கு வலுவூட்டும். உன் இதயத்திற்கு தைரியமூட்டும்.


ஆன்மீக வைத்தியதிலும் பல மருந்துகள் உள்ளன.
அத்தனை மருந்துகளிலும் சர்வரோக நிவாரணி....பிரேமை ஒன்று தான்.
A முதல் Z வரை உள்ள அனைத்து விட்டமின்களும் பிரேமையில் அடக்கம்.

நான் என்றும் எப்போதும்....எப்போதும்....
உங்களுடனேயே இருக்கின்றேன்.
உங்களுக்கும் எனக்கும் உள்ள இடைவெளி....
உங்கள் கற்பனையே.
உங்கள் இதய விளக்கில்
அன்புச் சுடரை ஏற்றி வைக்க
நான் வந்திருக்கின்றேன்.
அதன் ஒளியிலே நீங்கள் ஒவ்வொருவரையும்
சாயியாகவே காண்பீர்கள்.
21 - 09-2006
சாய் ராம்.
 

Send instant messages to your online friends http://uk.messenger.yahoo.com

Thirukkovil Sathya Sai Centre -- | Website Sponsored By Jeshani Building Construction | created by R.Sayanolipavan