ஒரே மதம், அது அன்பு மதம் - பாபா

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா எந்த ஒரு புதிய மதத்தையும் நிறுவவோ, போதிக்கவோ முயற்சி செய்யவில்லை. அவருடைய பணியின் முக்கிய நோக்கங்கள்:
தனிநபருக்கு உதவுதல். இந்த உதவி மூன்று வகைப்பட்டது.1. அவனிடம் இயல்பாகவே உள்ள தெய்வீகத்தன்மையை அவனே உணர உதவுதல். இறைவனுடன் இரண்டறக் கலப்பது என்ற இறுதி இலட்சியம் நோக்கிச் செல்ல உதவுதல்.2. தெய்வீகம் என்பது அன்பு, கடமையில் காட்டப்படும் கச்சிதம் ஆகியவற்றில் அட்ங்கும் என்பதால் இவற்றை வாழ்க்கையில் கடைப்பிடிக்க உதவுதல்.3. இதன் மூலமே வாழ்க்கையில் மகிழ்ச்சி, அழகு ஆகியவற்றை அநுபவிக்கச் செய்தல்.
எல்லாவிதமான மனித உறவுகளும் பின்வரும் அடிப்படைகளில் இயங்க வேண்டும் என்பதை உணர்த்துதல்: சத்யம், தர்மம், பிரேமை, சாந்தி, அஹிம்சை.
மதம் என்பதன் மெய்யான அடிப்படையினை உணர்த்துவதன் மூலம் எல்லா மதத்தினருக்கும் தங்கள் தங்கள் மதக் கோட்பாடுகளை மேலும் தீவிரமாகவும் மனப்பூர்வமாகவும் பின்பற்ற உதவுதல்.
இந்த இலட்சியங்களையெல்லாம் அடைய பின்வரும் கோட்பாடுகளை அநுசரிக்கும்படி கூறுகிறார் பாபா:
1. ஒரே மதம் அது அன்பு மதம்ஒரே ஜாதி அது மனித ஜாதிஒரே மொழி அது இதய மொழிஒரே கடவுள் அவர் சர்வ வியாபி.
2. எப்போதும் கடவுளை நினைத்து உலகின் சகல ஜீவராசிகளும் ஜடப்பொருள்களும் கூட அவனது பல்வேறு வடிவங்களுள் ஒன்றே என்று உணருதல்.
3. எல்லா மதங்களின் இடையேயும் உள்ள ஒற்றுமைகளை அடிக்கோடிட்டுக் காட்டி, எல்லா மதங்களும் அன்பின் அடிப்படையில் உருவானவை என்பதைப் புரிந்து கொள்வது.
4. கடமையாற்றுவது என்பது இறைவனுக்குச் செய்யும் சேவை என்பதை உணர்ந்து செயல்படுவது.
5. வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகள் அனைத்திலும் தெய்வீக அன்பு, கருணை, சகிப்புத் தன்மை, உதவுகிற இயல்பு ஆகியவற்றைக் கொணர்ந்து இவை மூலம் அந்தப் பிரச்சினைகளைச் சந்தித்து வெற்றி காணல்.
6. எல்லாக் காரியங்களையும் தார்மீக அடிப்படையிலும், பாபத்துக்கு அஞ்சும் அடிப்படையிலும் எடைபோட்டுச் செய்தல்.
7. வாழ்க்கையை நடத்தக் கடமையாற்றுவது தவிர ஆன்மீக, கல்வி அல்லது சேவா மார்க்கத்திலும் மனத்தைச் செலுத்தி இதன் மூலம் தனி நபர்களுக்கோ சமுதாயத்துகோ உதவ முயற்சி மேற்கொள்ளுதல். இதனைத் திட்டமிட்டும் எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமலும் செய்தல். நம்மை யாரும் பாராட்ட வேண்டும் என்று கூட எதிர்பாராமல் இறைவனின் அன்பையும் அருளையும் பெறமட்டுமே செயலாற்றுதல்

Thirukkovil Sathya Sai Centre -- | Website Sponsored By Jeshani Building Construction | created by R.Sayanolipavan